பழகிப்போச்சு எப்படி ஆங்கிலத்தில் சொல்வது? Part – 1

பழகிப்போச்சு எப்படி ஆங்கிலத்தில் சொல்வது? Part – 1
நாம் கடந்த காலத்தில் ஒரு பழக்கவழக்கத்தை அல்லது நிலையைப் பற்றி பேசுவதற்கு used to பயன்படுத்தலாம். ஆனால் தற்பொழுது அந்த பழக்கம் அல்லது நிலைமை மாறி இருக்ககும்.
உதாரணமாக
Positive sentence: உடன்பாட்டு வாக்கியம்
Formula : subject + used to + base verb
நாம் கடந்த காலத்தை பற்றி தான் பேசுவதால் He, she, it போன்ற third person singular ஆக இருந்தால் கூட verb உடன் s/es சேர்க்க கூடாது.
He used to smoke.
அவர் புகைப்பிடித்தார். (அதாவது கடந்த காலத்தில் அவர் புகைப்பிடிப்பதை பழக்கமாக வைத்திருந்தார்.)
Wrong : He used to smokes
but now he doesn’t smoke. ஆனால் இப்போது அவர் புகைப்பதில்லை.
I used to bath in a well when I was younger
நான் சிறு வயதில் கிணற்றில் குளிப்பேன் (கிணற்றில் குளிப்பது பழக்கமாக இருந்தது)
I used to walk to school when I was younger.
நான் சிறு வயதில் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம்.
You used to see a lot of her, didn’t you?
நீங்கள் அவளை நிறையப் பார்த்தீர்கள், இல்லையா? (அதாவது அவளை அடிக்கடி பார்ப்பது)
We used to go on holiday to my grandmother’s house every year
நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் என் பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்கு செல்வது வழக்கம்
My parents used to live in a village
என் பெற்றோர் ஒரு கிராமத்தில் வசித்து வந்தனர் (அதாவது பெற்றோர்கள் கிராமத்தில் வசிப்பது பழக்கமாக இருந்தது)
He used to go camping every summer.
அவர் ஒவ்வொரு கோடையிலும் முகாமிடுவார். (அதாவது கோடையில் முகாம் போடுவதை பழக்கமாக வைத்திருந்தார்)
Negative sentence: எதிர்மறை வாக்கியம்
Formula : subject + didn’t + use to + base verb
நம்ம வீட்டுல சொல்லறது இல்லையா, அவனுக்கு அந்த பழக்கமே கிடையாது, ஆனா இப்ப எல்லாம் பண்றான், அது நல்ல விஷயமோ அல்லது கெட்ட விஷயமோ, ஆனால் கடந்த காலத்தில் அவனுக்கு கிடையாது.
He didn’t use to smoke.
அவர் புகைபிடிக்கற பழக்கமேயில்லை. (ஆனால் அவர் தற்போழுது பிடிக்கலாம்)
I didn’t use to exercise.
நான் உடற்பயிற்சி செய்ய பழக்கமே இல்லை
People didn’t use to have TV in 80’s
மக்கள் என்பதுகளில் டிவி வைத்திருக்க பழக்கமில்லை.
I didn’t use to hate school.
நான் பள்ளியை வெறுக்கும் பழக்கமே இல்லை. (அதாவது பள்ளியை நேசிப்பார் I used to like school)
I didn’t use to sleep very well, but now…..
நான் நன்றாக தூங்கப் பழக்கமே இல்லை, (ஆனால் இப்பொழுது நன்றாக தூங்கவதாக அர்த்தம்)
She didn’t use to like chocolate, but she does now.
அவள் சாக்லேடை விரும்புகிற பழக்கமே இல்லை, ஆனால் அவள் இப்போது செய்கிறாள்.
அடுத்த பாடத்தில் மேலும் இது பற்றி காண்போம்.
Very nice teaching
thank you, share with your groups
Good way to learn easily.
thank you, please share with your friends
Super
Thank you