யாராக இருந்தாலும் தினந்தோறும் ஏதோ ஒரு வேலையை, செயலை நாம் செய்து கொண்டே இருப்போம். உழைப்பாளியாக இருந்தால் நிறைய வேலைகளை செய்வார்கள். சோம்பேறியாக இருந்தால் குறைந்தபட்சம் டிவி பார்ப்பது, பொழுதை கழிப்பது இப்படி ஏதேனும் ஒரு வேலையை செய்து கொண்டே தான் இருப்பார்கள்.
- காலையில் எழுந்திருப்பது
- பல் துலக்குவது
- குளிப்பது
- வேலைக்குச் செல்வதில்
- சாப்பிடுவது
- ஓய்வெடுப்பது
- தூங்குவது
இப்படி எல்லாமே ஒரு வேலை அதாவது ஒரு செயல் தான். தினம்தோறும் நாம் ஏதாவது ஒரு செயலை செய்யாமல் நம்மால் இருக்க முடியாது.
செயல் என்பது அது வழக்கமானதாகவும் இருக்கலாம், கடந்த காலத்தில் நடந்த செயலாகவும் இருக்கலாம் அல்லது இனி எதிர்காலத்தில் நாம் செய்யக்கூடிய செயலாக இருக்கலாம்.
இதை விரிவாகக் Tense படத்தில் கற்க இருக்கிறோம் ஆனால் தற்போது மேலோட்டமாக ஒரு சில வாக்கியங்களை வைத்து நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
நம்ம கதையோட நாயகி மீனா இருக்காங்களே அவங்க வழக்கமா காலையில ஏழு மணிக்கு தான் எழுந்திருப்பாங்க.
இப்போ மீனா அவங்களுடைய நண்பர்களிடத்தில் சொல்கிறார்.
“I wake up at 7am every morning.”
நான் தினமும் காலை 7 மணிக்கு எழுந்திருக்கிறேன்.
நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய செயல்களை எப்பொழுதும் Simple present tense-ல் தான் சொல்ல வேண்டும்
மேற்கண்ட வாக்கியத்திலிருந்து நன்றாக ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய செயல்களை தெரிவிக்க வினைச்சொல் (verb) யை பயன்படுத்தி தான் நீங்கள் சொல்ல முடியும். ஆதலால் நிறைய verbs களை தெரிந்திருக்க வேண்டும் இல்லயென்றால் நீங்கள் செய்யக்கூடிய செயல்களை தெரிவிப்பது என்பது கடினமாகிவிடும். காலையில் 7 மணிக்கு மீனா எழுந்திருக்கிறாள் என்பதில் wake என்ற வினைச்சொல் தெரியவில்லை என்றால் அவளால் அந்த வாக்கியத்தை கூற இயலாது.
சில முக்கியமான வினைச் சொற்களையும் அதற்குண்டான தமிழ் அர்த்தத்தையும் பின்வரும் பாடத்தில் தனியாகக் காண்போம்.
இப்பொழுது மீனாவின் தோழி அவளிடம் கேட்கிறாள்
“What time do you usually wake up in the morning?”
நீங்கள் வழக்கமாக காலையில் எந்த நேரத்தில் எழுந்திருக்கிறீர்கள்?
ஒருவர் வழக்கமாக செய்யக்கூடிய செயல்களை கேட்பதற்கும் Simple present tense-ல் கேட்க வேண்டும்.
அதற்கு மீனா,
“I wake up at 7am every morning.”
நான் தினமும் காலை 7 மணிக்கு எழுந்திருக்கிறேன். என்று பதில் அளிக்கிறார்.
wake – Present tense verb
நேற்று இரவு மீனா, அம்மாவிடம்…
“I have to wake up early tomorrow”
நான் நாளை அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்.
“Can you wake me up early tomorrow?”
நாளை அதிகாலையில் என்னை எழுப்ப முடியுமா? என்று அம்மாவிடம் கேட்கிறாள்
அதற்கு அம்மா…
“What time should I wake you up?”
நான் உன்னை எந்த நேரத்தில் எழுப்ப வேண்டும்? கேட்கிறார்கள்.
அதற்கு மீனா…
“Please wake me at six.”
தயவுசெய்து என்னை ஆறு மணிக்கு எழுப்புங்கள்., என்று சொல்கிறாள்.
அம்மா அதற்கு… சரி எழுப்புகிறேன் என்று பதில் அளித்துவிட்டு குட்நைட் சொல்கிறார்.
மீனா குட்நைட் சொல்லவிட்டு…
“Don’t forget to wake me up tomorrow morning.”
நாளை காலை என்னை எழுப்ப மறக்காதீர்கள். என்று மறுபடியும் ஞாபகப்படுத்துகிறார்.
ஆனால் மறுநாள் காலையில் மீனா தாமதமாக (late) எழுந்தார். உடனே தன்னுடயை status -ல்
“I woke up too late this morning”
நான் இன்று காலை மிகவும் தாமதமாக எழுந்தேன், என்று வைக்கிறார்.
பிறகு அம்மாவிடம் சென்று
“Why didn’t you wake me?”
ஏன் என்னை எழுப்பவில்லை?
அதற்கு அம்மா…
I’m sorry I forgot to wake you up.
மன்னிக்கவும், நான் உங்களை எழுப்ப மறந்துவிட்டேன். என்று சொல்கிறார்.
Then, What woke you up?
பிறகு, உன்னை எழுப்பியது எது? என்று அம்மா கேட்க..
மீனாவோ அதற்கு,
“I woke up when the mobile rang”
மொபைல் ஒலிக்கும் போது நான் எழுந்தேன்
இப்பொழுது மேலும் மீனா செய்கின்ற சில வழக்கமான செயல்களைப் பற்றி சொல்கிறாள்.
I have a cup of coffee and make breakfast.
நான் ஒரு கப் காபி சாப்பிட்டு காலை உணவை உண்டாக்குகிறேன்.
I shower every morning after exercise
நான் தினமும் காலையில் உடற்பயிற்சியின் பின்னர் குளிப்பேன்
I go to work at 8.45am every morning.
நான் தினமும் காலை 8.45 மணிக்கு வேலைக்குச் செல்கிறேன்.
I take a bus to work.
நான் வேலைக்கு பஸ்ஸில் செல்கிறேன்.
இப்படி நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய செயல்களை எப்பொழுதும் Simple present tense-ல் தான் சொல்ல வேண்டும்.
ஆபிஸ் அடைந்தவுடன் மீனாவுடைய தோழி கேட்கிறாள்.
“What time did you wake up?”
நீ எந்த நேரத்தில் எழுந்தீர்கள்? என்று கேட்கிறாள்.
அதற்கு மீனா கொஞ்சமும் யோசிக்காமல்
“I woke at dawn this morning”
நான் இன்று காலை விடியற்காலையில் விழித்தேன். என்று பொய் சொல்லிவிடுகிறாள்.
dawn – விடியற்காலை
woke – Past tense verb
நடந்து முடிந்த செயல்களை கேட்கவோ அல்லது சொல்லவோ Past tense-யை பயன்படுத்தப்பட வேண்டும்
மேலும் சில எழுந்திருப்பது சம்பந்தமான வாக்கியங்களை பாரப்போம்.
நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் இது போல சொல்லலாம்.
It’s time for you to wake up.
நீங்கள் எழுந்திருக்க வேண்டிய நேரம் இது.
I’ve been trying to wake you up.
நான் உங்களை எழுப்ப முயற்சித்தேன்
இது ஒரு Present perfect continuous tense வாக்கியம். உங்கள் குழந்தைகளை எழுப்ப முயற்ச்சித்தீர்கள், ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை, சரி மீண்டும் சமையல் சென்று விடுகிறீர்கள். அப்போழுது உங்கள் கணவர் உங்களை பார்த்து What have you been doing? நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கிறார் என்றால் அப்போழுது நீங்கள் I’ve been trying to wake children up. நான் குழந்தைகளை எழுப்ப முயற்சி செய்துகொண்டிருந்தேன்… என்று சொல்லாம்.
இங்கு மரியாதைக்காக நீங்கள் என்று எல்லாம் பயன்படுத்தி இருக்கிறேன். ஆனால் வீட்டில் “என்ன பன்னடிட்டு இருந்த?” ஆகையால் ஒவ்வொரு வாக்கியமும் நம் நடைமுறை தமிழ்க்கு தகுந்தாற் போல் மாற்றிக்கொள்ளுங்கள்.
வரட்டா…. அடுத்த லெசன்ல பார்க்கலாம்ய்யா அன்னத்த…