நேற்றைய பாடத்தில நம்ம கதாநாயகி மீனம்மா ஆபீசுக்கு போயிட்டாங்க அதுக்கப்புறம் ரிலாக்ஸ் ஆக உட்கார்ந்து தன்னுடைய மொபைல் திறந்து பாக்குறாங்க.
குறிப்பு: இப்ப எல்லாம் யார் ஆபிஸ் போன உடனே வேலையை பார்க்கிறார்கள், முதலில் தன்னுடைய கைபேசில் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு தான் பிறகு வேலை தொடங்குகிறார்கள்.
“Oh!, I received so many messages from groups”
ஓ!, குழுக்களிடமிருந்து எனக்கு பல செய்திகள் வந்தன
and a phone call from mother.
மற்றும் தாயிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.
Gosh, I got my salary
எனக்கு என்னுடைய சம்பளம் கிடைத்தது
Gosh : ஆச்சரியத்தை வெளிப்படுத்த இந்த வார்த்தை பயன்படுகிறது:
சம்பளம் கிடைத்தவுடன் அவளுடைய தோழி சும்மா இருப்பார்களா அதான் உடனே கேட்டுவிட்டாள்.
“Shall we go and have dinner tonight?”
இன்றிரவு நாம் சென்று இரவு உணவருந்தலாமா?
கேட்கின்ற நேரத்தில் தான் நீங்கள் அந்த முடிவை எடுத்த பேசுகிறீர்கள் என்றால் அப்பொழுது தான் will/shall பயன்படுத்தப்பட வேண்டும்.
மறுபடியும் அவளுடைய தோழி
Why don’t we go to cinema?
நாம் ஏன் சினிமாவுக்கு செல்லக்கூடாது?
இங்கு நாம் யோசனையை தான் கேட்கிறோம் “நாம் ஏன் சினிமாவுக்கு செல்லக்கூடாது?” என்று அதனால்தான் will/shall பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக simple present tense- லே கேட்கிறோம்
அதற்கு மீனா..
We don’t need plans like that
அது போன்ற திட்டங்கள் நமக்கு தேவையில்லை. என்று பதில் அளிக்கிறார்.
and one more thing, I have been invited to the party tonight
மேலும் ஒரு விஷயம், நான் இன்று இரவு விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளேன்.
அதனால் இன்று நம்மால் வெளியே செல்லமுடியாது என்று சொல்கிறாள்.
அப்பொழுது அவளுடைய கைபேசி ஒலிக்கிறது, எடுத்து பார்க்கிறாள், ஒரு குறுஞ்செய்தி (SMS) நண்பரிடத்திலிருந்து….
Your ticket will be waiting for you when you get to the hotel.
நீங்கள் ஹோட்டலுக்கு வரும்போது உங்கள் டிக்கெட் உங்களுக்காக காத்திருக்கும்.
அவள் விருந்துக்கு செல்வதற்க்கான உத்திரவாதம் கிடைத்தது.
இப்பொழுது நீங்கள் படிப்பதற்க்கான உத்திரவாதத்தை நாங்கள் அளிக்கிறோம். எங்களுடைய நோக்கமே ஆங்கிலத்தை எளிமையாக எல்லோரும் கற்க வேண்டும் என்பதே. அதற்காக தான் இந்த புது முயற்சியாக கதையின் மூலம் நாங்கள் ஆங்கிலத்தை கற்றுத் தருகிறோம். ஆதாலால் உங்களுக்கு எளிமையாக புரியவும் செய்யும், படிப்பதற்க்கு ஆர்வமும் இருக்கும். இந்த லெவல் ஒன்றில் இன்னும் 100 பாடங்கள் கதையின் வாயிலாக வர இருக்கிறது.
இன்றே எங்களுடன் சேர்ந்து அனைத்து மொழிகளையும் எளிதாக கற்கலாம் வாருங்கள்.