Lesson Progress
0% Complete

நாம் எப்பொழுதும் பேச ஆரம்பித்தால் ஒன்று, நம்மை பற்றி பேசுவோம் இல்லை அடுத்தவர்களை பற்றி பேசுவோம் இல்லை ஏதேனும் ஒன்றைப் பற்றி பேசுவோம், அது பாராட்டி உயர்வாக இருந்தாலும் சரி குறைத்து தாழ்வாக இருந்தாலும் சரி, ஒருவரையோ அல்லது ஒன்றைப் பற்றியோ விவரித்துக் கொண்டே இருப்போம். உதாரணமாக….
ஒரு பெண்ணை பற்றி பேசுவதாக நாம் இப்பொழுது வைத்துக் கொள்வோம்.

She is a beautiful girl
அவள் ஒரு அழகான பெண்

யாரைப்பற்றி அல்லது எதைப்பற்றி பேசுகிறோமோ அது தான் சப்ஜெக்ட் (subject). அவரை பற்றி அல்லது அதைப்பற்றி என்ன பேசுகிறோமோ அது தான் Predicate.
இங்கு She என்பது ஒரு subject
is a beautiful girl என்பது Predicate ஆகும்.

I, we, you, he ,she, it, they, …. இது எல்லாம் subjects களாகும்.
இங்கு she பதிலாக Meena என்ற பெயரை போட்டால் அதுவும் ஒரு subject ஆகும். அனைத்து பெயர்களும் சப்ஜெட் ஆகும்.

இப்பொழுது அந்தப் பெண்ணைப் பற்றி பேசுவோம்.
அவள் ஒரு பெண் என்று நாம் சொல்கிறோம். இதில் பெண் (girl) என்பது Noun (பெயர்ச்சொல்) ஆகும். அவளை சாதாரணமாக ஒரு பெண் (girl) என்று சொல்லாமல் கொஞ்சம் மெருகேற்றி கூடுதலாக அழகான பெண் (beautiful girl) என்று சொல்கிறோம்.
இங்கு beautiful என்பது ஒரு adjective (பெயர் உரிச்சொல்).

Adjective என்பது பெயர்ச்சொல் (noun) அல்லது பிரதிபெயர்ச்சொல்லை (pronoun) மேலும் விவரித்து கூறுவது.

she – subject (பொருள்)
is – auxiliary verbs (துணை வினைச்சொற்கள்)
beautiful – adjective (பெயர் உரிச்சொல்)
girl – noun (பெயர்ச்சொல்)

நம்முடைய இந்த பாடத்திட்டத்தில் இலக்கணத்தை முதல் Level – 1 ல் மேலோட்டமாக மட்டுமே பார்க்க இருக்கிறோம். அடுத்த Level – 2 பகுதியில் இலக்கணம் பற்றி முழுமையாக படிக்க இருக்கிறோம்.

ஒரு ஆண் ஒரு பெண்ணை பற்றி கவிதை எழுத ஆரம்பித்தால் எவ்வளவு சொல்வார்களே அதே போல தான் நாம் அந்த பெண்ணை பற்றி மேலும் விவரிப்போம்.

She’s a selfless person
அவள் தன்னலமற்ற நபர்

ஒருவரை பற்றி அல்லது ஒன்றைப் பற்றி பொதுவான தன்மைகள், உண்மைகள் பற்றி சொல்ல Simple present tense காலத்தில் பயன்படுத்த வேண்டும்.

Formula : Subject + am/is/are……

I க்கு am (I am a teacher)
We, you, they and plural subjects க்கு are (We are students, You are a teacher)
He, she, it (third person singular subjects) க்கு is பயன்படுத்த வேண்டும்.

He is a great writer
அவர் ஒரு சிறந்த எழுத்தாளர்

She’s incredibly smart
அவள் நம்பமுடியாத புத்திசாலி

It is a brilliant idea
இது ஒரு சிறந்த யோசனை

My house is very spacious and clean.
எனது வீடு மிகவும் விசாலமானதாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.

This is a very beautiful and useful book.
இது மிகவும் அழகான மற்றும் பயனுள்ள புத்தகம்.

She is the smartest in the class.
அவள் வகுப்பில் புத்திசாலி.

She’s such a spontaneous, lively woman.
அவர் ஒரு தன்னிச்சையான, சுறுசுறுப்பான பெண்.

She is a handsome young woman, smart and buxom.
அவர் ஒரு அழகான இளமையான, புத்திசாலியான மற்றும் குண்டான பெண்

buxom – ஆரோக்கியமான மற்றும் சற்று பெருத்த, பெரிய மார்பகங்களுடன் கூடிய பெண்

இப்பொழுது அந்த பெண்ணைப்பற்றி நேற்று அதாவது கடந்த காலத்தில் (past tense) எப்படி இருந்தால் என்று கேட்கும்பொழுது…

She was looking very glamorous at the party.
அவள் விருந்தில் மிகவும் கவர்ச்சியாக இருந்தாள்.

அவளைளப்பற்றி நிகழ்காலத்தில் (present tense) சொல்லும் பொழுது is என்பதும் அதுவே கடந்த காலத்தில் was என்பதும் பயன்படுத்தப்படுகிறது.

She was a great beauty when she was young.
அவள் சிறு வயதில் ஒரு பெரிய அழகாக இருந்தாள்.

She was a courageous woman
அவர் ஒரு தைரியமான பெண்னாக இருந்தாள்

She was a fearless woman in her young age
அவள் இளம் வயதில் ஒரு அச்சமற்ற பெண்னாக இருந்தாள்.

It was a beautiful plan.
அது ஒரு அழகான திட்டம்.

கடந்தகாலத்தில் ஒருவரைப்பற்றி அல்லது ஒன்றைப்பற்றி பேசும்பொழுது singular subjects (- I, he, she, it..) ஆக இருந்தால் was-ம் அதுவே plural subjects (- you, we, they…) ம் ஆக இருந்தால் were ம் பயன்படுத்ப்படுகிறது.

The food was already on the table.
உணவு ஏற்கனவே மேஜையில் இருந்தது.

I was very busy last week.
நான் கடந்த வாரம் மிகவும் பிஸியாக இருந்தேன்.

We were very tired.
நாங்கள் மிகவும் சோர்வாக இருந்தோம்.

My baby was born yesterday.
என் குழந்தை நேற்று பிறந்தது.

We were surprised to hear the news.
செய்தியைக் கேட்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

இப்பொழுது அந்த பெண்ணுக்கு அதாவது நம் கதாநாயகி மீனாவிற்க்கு ஒரு சகோதரி இருக்கிறாள் என்றால்…

She has an adorable little sister.
அவளுக்கு ஒரு அபிமான(போற்றதக்க) சிறிய சகோதரி உள்ளார்.

இங்கு பார்த்தீர்கள் என்றால் ஒருவரைப் பற்றி present tese -ல் சொல்லும்பொழுது am/is/are -ம் , past tense-ல் was/were -ம் பயன்படுத்துகிறோம். அதுவே அவர் பெற்றிருக்கக் கூடிய விஷயங்களை பற்றி சொல்லும் பொழுது have/has பயன்படுத்தப்பட வேண்டும்.

I, we, you, they, —— have
He, she, it and singular subjects —– has

Meena has so much homework tonight.
மீனாவுக்கு இன்றிரவு இவ்வளவு வீட்டுப்பாடம் உள்ளது.

I have some money
என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது

He has four children.
அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

We have a little home
எங்களுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது

He has chocolate ice cream in the freezer.
அவர் ஃபிரீசரில் சாக்லேட் ஐஸ்கிரீம் வைத்திருக்கிறார்.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இன்னும் இதுபோல விரிவாக பின்வரும் 30 பாடங்களில் நாம் படித்திருக்கிறோம். உங்கள் அபிமான கருத்துக்களை முகப்பு பகுதியில் (Course home page) பதிவிடுங்கள்.

error: Content is protected !!

Learn languages

English, Hindi & Malayalam @ 499/- only

Just one time payment,
no monthly charges

Group Chat
on Telegram