நாம் இப்பொழுது பார்க்க இருப்பது Be form verbs. இதனை auxiliary verbs or helping verbs துணைவினைச்சொற்கள் என்று அழைக்கப்படுகிறது. Be என்றால் தமிழில் “இரு” என்று அர்த்தம் ஆகும்.
தமிழில் கூட..
• இருக்கிறேன்
• இருக்கிறான்
• இருக்கிறார்கள்
என்று மூன்று விதமாக சொல்கிறோம் இடத்திற்கு ஏற்றார் போல் அதாவது சப்ஜெக்ட் தகுந்தார்போல்.
• நான் இருக்கிறேன்
• அவன் இருக்கிறான் அல்லது அவள் இருக்கிறாள்
• அவர்கள் இருக்கிறார்கள்
என்று தானே தமிழில் கூட சொல்கிறோம். இதையே ஆங்கிலத்தில் சொல்வதற்கு தான் இந்த Be form verbs. தேவைப்படுகிறது. இது நிகழ்காலத்தில் மூன்று வகைகளாக இருக்கிறது.
Am, is, are என்பவையாகும்
• I – க்கொண்டு வாக்கியம் உருவாக்கும் பொழுது am
• He, she, it போன்ற singular subject களைக் கொண்டு வாக்கியம் உருவாக்கும் பொழுது is
• Plural subjects-களுக்கு are பயன்படுத்தப்பட வேண்டும்.
ஏதேனும் ஒன்றை பற்றியோ அல்லது ஒருவரைப் பற்றியோ விவரிக்க அதாவது அவற்றின் நிலைமையை (state), உணர்ச்சியை (feeling), தன்மையை(condition) எடுத்துச் சொல்ல இந்த துணை வினைச் சொற்கள் (auxiliary verbs) பயன்படுகின்றது.
Am என்பதை எவ்வாறு வாக்கியத்தில் பயன்படுத்தலாம் என்பதனை காண்போம்.
இப்பொழுது சில வாக்கியங்களை படிக்கும் பொழுது உங்களுக்கு நன்றாக விளங்கும்.
I am a teacher.
நான் ஒரு ஆசிரியர்.
I am a businessman
நான் ஒரு தொழிலதிபர்
I am a collector.
நான் ஒரு மாவட்ட ஆட்சியாளர்
I am a policeman.
நான் ஒரு போலீஸ்.
I am an advocate.
நான் ஒரு வக்கீல்.
I am a manager.
நான் ஒரு மேலாளர்.
I am in Chennai
நான் சென்னையில் இருக்கிறேன்
I am tall.
நான் உயரமாக இருக்கிறேன்.
I am the same age.
நானும் அதே வயதுதான்.
I am engaged to her.
நான் அவளுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறேன்.
I am a stranger here.
நான் இங்கே ஒரு அந்நியன்.
I am an atheist.
நான் ஒரு நாத்திகன்
I am eighteen years old.
எனக்கு பதினெட்டு வயது.
I am cool.
நான் இயல்பானவன்.
I am a tragic person.
நான் சோகமான நபர்.
I am superstitious.
நான் மூடநம்பிக்கை கொண்டவன்
மேற்கண்ட வாக்கியங்களில் நான், என்னை பற்றி நிலைமயை (state) சொல்கிறேன்.
I am so happy.
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
I am so hungry.
எனக்கு மிகவும் பசிக்கிறது.
I am extremely sorry.
நான் மிகவும் வருந்துகிறேன்.
I am surprised.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
I am upset.
நான் வருத்தப்படுகிறேன்.
I am terribly hungry.
எனக்கு பயங்கர பசி.
I am tired
நான் சோர்வாக இருக்கிறேன்
I am sad.
நான் சோகமாக உள்ளேன்.
I am thirsty.
எனக்கு தாகமாக இருக்கிறது.
I am very grateful to you.
நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
I am disgusted with him.
நான் அவரிடம் வெறுப்படைகிறேன்.
I am sorry
என்னை மன்னிக்கவும்
I am frightened.
நான் பயந்துவிட்டேன்.
I’m dreadfully sorry – I really am.
நான் மிகவும் வருந்துகிறேன் – நான் உண்மையில் இருக்கிறேன்.
மேற்கண்ட வாக்கியங்களில் நான், என்னுடைய உணர்ச்சியை (feeling) பற்றி சொல்கிறேன்.
I am so proud of him.
நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்.
I am so frightened!
நான் மிகவும் பயந்துவிட்டேன்!
I am afraid of dogs
நான் நாய்களுக்கு பயப்படுகிறேன்
I am able to drive a car
என்னால் ஒரு காரை ஓட்ட முடிகிறது
I am afraid to go
நான் செல்ல பயப்படுகிறேன்
I am sure.
நான் உறுதியாக இருக்கிறேன்.
I am late.
நான் வருவதற்கு நேரமாகி விட்டது.
I am on your side
நான் உங்கள் பக்கத்தில் இருக்கிறேன்
I am too tired to run.
நான் ஓட மிகவும் சோர்வாக இருக்கிறேன்.
I am no longer a child.
நான் இனி ஒரு குழந்தை இல்லை.
I am about to leave here.
நான் இங்கிருந்து புறப்பட உள்ளேன்.
I am ready to follow you.
உங்களைப் பின்தொடர நான் தயாராக இருக்கிறேன்.
I am able to read English.
என்னால் ஆங்கிலம் படிக்க முடிகிறது.
I am in the office
நான் அலுவலகத்தில் இருக்கிறேன்
I am sure
நான் உறுதியாக இருக்கிறேன்
I am doubtful
எனக்கு சந்தேகம்
I am able to read English.
என்னால் ஆங்கிலம் படிக்க முடிகிறது.
I am familiar with this subject.
இந்த விஷயத்தை நான் நன்கு அறிவேன்.
மேற்கண்ட வாக்கியங்களில் நான், என்னுடைய தன்மையை (condition) பற்றி சொல்கிறேன்.
இதுவரை நீங்கள் பார்த்த வாக்கியங்கள் அனைத்தும் நேர்மறை வாக்கியங்கள் (positive sentences) அடுத்த பாடத்தில் எதிர்மறை வாக்கியங்களை (negative sentences) பற்றி பார்ப்போம்.
குறிப்பு : – I என்ற pronoun க்கு மட்டுமே am பயன்படுத்த வேண்டும்.
Responses