Lesson Progress
0% Complete

இதுவரை நீங்கள் am- யைக் கொண்டு நேர்மறையான வாக்கியங்களை (Positive sentences Or affirmative sentences ) பார்த்தீர்கள்.  இப்போது நாம் பார்க்க இருப்பது எதிர்மறை வாக்கியங்கள் (Negative sentences) ஆகும்.

I am a teacher.
நான் ஒரு ஆசிரியர்.

இப்பொழுது நீங்கள் “நான் ஒரு ஆசிரியர் இல்லை” என்பதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால், அந்த வாக்கியத்தை எவ்வாறு அமைப்பது  என்பது பின்வருமாறு பார்க்கலாம்.

I am not a teacher.
நான் ஆசிரியர் இல்லை.

எந்த ஓர் இடத்திலும் not  சேர்த்தால் இல்லை என்று பொருள்படும், இப்பொழுது நாம் am உடன் not சேர்த்து மேற்கண்ட வாக்கியத்தை அமைத்து இருக்கிறோம்.

மேலும் சில வாக்கியங்களை பார்ப்போம்.

I am not sure
எனக்கு உறுதியாக தெரியவில்லை

I am not doubtful
எனக்கு சந்தேகம் இல்லை

I am not on your side
நான் உங்கள் பக்கத்தில் இல்லை

I am not tired.
நான் சோர்வடையவில்லை.

I am not hungry
எனக்கு பசியில்லை

I am not angry
நான் கோபமாக இல்லை

I am not surprised.
எனக்கு ஆச்சரியமில்லை.

I am not happy.
நான் மகிழ்ச்சியாக இல்லை.

I am not afraid to go.
நான் செல்ல பயப்படவில்லை.

I am not the same age.
நான் ஒரே வயது இல்லை.

I am not able to drive a car.
என்னால் காரை ஓட்ட முடியவில்லை.

I am not interested in music.
எனக்கு இசையில் ஆர்வம் இல்லை.

I am not certain about that.
அது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை.

I am not acquainted with him.
நான் அவரை அறிந்திருக்கவில்லை.

I am not concerned with this.
இது குறித்து எனக்கு அக்கறை இல்லை.

I am not sure but she may come.
எனக்கு உறுதியாக தெரியவில்லை ஆனால் அவள் வரக்கூடும்.

I am not always free on Sundays.
ஞாயிற்றுக்கிழமைகளில் நான் எப்போதும் இலவசமாக இல்லை.

I am not about to pay ten dollars.
நான் பத்து டாலர்களை செலுத்தப்போவதில்லை.

சில நேரங்களில் am not என்பதை இப்படியும் சிலர் எழுதுவார்கள்.

am not = ain’t

ain’t = short form of am not, is not, are not, has not, or have not எல்லாவற்றிக்கும் பொதுவானது. இடத்திற்க்கு தகுந்தாற் போல் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக

He ain’t going.
அவர் போகவில்லை. (இங்கு ain’t = is not ஆகும்.)

I ain’t done nothing wrong.
நான் எந்த தவறும் செய்யவில்லை (இங்கு ain’t = am not ஆகும்.)

இனி அடுத்த பாடத்தில் வினா வாக்கியங்களை (Question sentences) பற்றிப் பாரப்போம்.

Responses

Your email address will not be published.

error: Content is protected !!

Learn languages

English, Hindi & Malayalam @ 499/- only

Just one time payment,
no monthly charges

Group Chat
on Telegram