Lesson Progress
0% Complete

இதுவரை நீங்கள் நேர்மறை வாக்கியங்கள் (positive sentences) மற்றும் எதிர்மறை வாக்கியங்களை (negative sentences) படித்தீர்கள். இப்பொழுது கேள்வி வாக்கியம் (Question sentences) எப்படி அமைப்பது என்பதை பார்ப்போம்.

I am right (positive sentence)
நான் சொல்வது சரி

I am not right (negative sentence)
நான் சொல்வது சரி இல்லை

Am I right? (Question sentence)
நான் சொல்வது சரிதானே?

நேர்மறை மற்றும் எதிர்மறை வாக்கியங்களில் முதலில் I என்ற subject வருகிறது அதன் பிறகு  am என்ற auxiliary verb (துனணவினைச்சொல்) வருகிறது. ஆனால் கேள்வி வாக்கியத்தில் am என்ற auxiliary verb -யை முதலில் போட்டால் அது கேள்வி வாக்கியமாக மாறிவிடும்.

Am I smart?
நான் புத்திசாலியா?

Am I included?
நான் சேர்க்கப்பட்டுள்ளேனா?

Am I happy?
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா?

Am I a saint?
நான் ஒரு துறவியா?

Am I eligible to apply for the job?
வேலைக்கு விண்ணப்பிக்க நான் தகுதியுள்ளவனா?

Am I looking good?
நான் அழகாக இருக்கிறேனா?

Am I a good singer?
நான் ஒரு நல்ல பாடகரா?

Am I a doctor?
நான் ஒரு டாக்டரா?

Am I a teacher?
நான் ஆசிரியரா?

Am I your friend?
நான் உங்கள் நண்பனா?

Am I late?
நான் வருவதற்கு நேரமாகிவிட்டதா?

Am I sympathetic?
நான் அனுதாபப்படுகிறேனா?

Am I your partner?
நான் உங்கள் கூட்டாளியா?

Am I speaking well?
நான் நன்றாக பேசுகிறேனா?

Am I disturbing you?
நான் உங்களை தொந்திரவு செய்கிறேனா?

Am I driving well?
நான் நன்றாக வாகனம் ஓட்டுகிறேனா?

Am I studying English?
நான் ஆங்கிலம் படிக்கிறேனா?

இதுவரை நீங்கள் am வைத்து நேர்மறை வாக்கியம்( (positive sentences) எதிர்மறை வாக்கியம் (negative sentences) வினா வாக்கியம் (Question sentences) ஆகியவற்றைப் படித்தீர்கள் இப்போது கடைசியாக மேலும் விரிவான வினா வாக்கியத்தை பற்றி காண்போம்.

I am right (positive sentence)
நான் சொல்வது சரி

I am not right (negative sentence)
நான் சொல்வது சரி இல்லை

Am I right? (Question sentence)
நான் சொல்வது சரிதானே?

Am I a doctor?
நான் ஒரு டாக்டரா?

Am I a teacher?
நான் ஒரு ஆசிரியரா?

Am I late?
நான் வருவதற்கு நேரமாகிவிட்டதா?

மேற்கண்ட நான்கு வினா வாக்கியங்களுக்கு நீங்கள் விடை அளிக்க விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு பதில் என்னவாக இருக்கும். ஒன்று “ஆம்” அல்லது “இல்லை” இதில் ஏதேனும் ஒன்றை தான் உங்களால் பதிலளிக்க முடியும். நான் ஒரு ஆசிரியரா?(Am I a teacher?) ஒரு வேளை நீங்கள் ஆசிரியராக இருந்தால் “ஆம்” என்று சொல்கிறீர்கள் இல்லையென்றால் “இல்லை” என்றுதானே சொல்ல முடியும். ஆதலால் இது போன்ற கேள்விகளை Yes or No types questions நாம் என்று சொல்கிறோம்.

Am I late? நான் வருவதற்கு நேரமாகிவிட்டதா? ஆனால் இப்போது நீங்கள் மேலும் சில தகவல்களை கேட்க விரும்புகிறீர்கள், அதாவது நான் எப்படி நேரம் ஆகிவிட்டேன்?(How am I late?) இதில் எப்படி என்ற கூடுதல் விவரத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள். இதுபோன்று மேலும் தகவல்களை அந்த வினாவில் பதில்களைப் பெறுவதற்கு தான் Wh-type questions பயன்படுகின்றன. எல்லா காலத்திலும் Wh-type questions வகையான கேள்விகள் பயன்படுத்தப்படுகின்றன.

Wh type questions = who, what, which, whose, where, when, why and how.

Formula:

Wh-question + am + Subject + …….?

Why am I late?
நான் ஏன் தாமதமாக வருகிறேன்?

Who am I?
நான் யார்?

Where am I?
நான் எங்கே இருக்கேன்?

How am I your partner?
நான் உங்கள் பங்குதாரர்/ வாழ்கை துணை எப்படி?

What am I to do now?
நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?

When am I to have it?
நான் எப்போது அதைப் பெறுவேன்?

Why am I here?
நான் ஏன் இங்கே இருக்கிறேன்?

What am I meant to do?
நான் என்ன செய்ய விரும்புகிறேன்?

How am I to get it home?
அதை எப்படி வீட்டிற்கு கொண்டு செல்வது?

What answer am I to take?
நான் என்ன பதில் எடுக்க வேண்டும்?

Responses

Your email address will not be published.

error: Content is protected !!

Learn languages

English, Hindi & Malayalam @ 499/- only

Just one time payment,
no monthly charges

Group Chat
on Telegram