ஆங்கிலம் கற்றுக்கொள்ள அதிக ஆர்வத்தோடு வந்து இருக்கும் நண்பர்களுக்கு அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டியவை. அதுவும் ஒரு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போல ஒரு மொழி என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.
நாம் என்றைக்காவது தமிழில் பேசும் போது எந்தவிதமான தயக்கமும் ஏற்படுவதில்லை, ஏன் என்று சிந்தித்து இருக்கிறோமா?
காரணம் தமிழை கண்டு நாம் பயப்படுவதில்லை. தமிழில் தினந்தோறும் பேசி பழகிய தால் நமக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. ஆனால் உண்மையில் ஆங்கிலத்தில் இருப்பதைப் போல தமிழிலும் இலக்கணம் இருக்கிறது ஆனால் நாம் அதைப்பற்றி யோசித்து இருக்கிறோமா? ஒரு வாக்கியத்தை கொடுத்து விட்டு இந்த வாக்கியத்தில் உள்ள பெயரடை (Adjective), வினையுரிச்சொல் (adverb), பெயர்ச்சொல் (noun), முன்னிடைச்சொல் (preposition) ஆகியவைகளை கண்டுபிடியுங்கள் என்று சொன்னால் தமிழ் ஆசிரியரும் தமிழ் பற்றுகொண்டவரை தவிர வேற யாருக்கும் தெரியாது.
எந்த ஒரு மொழியையும் தினந்தோறும் பழகப்பழக உங்களுக்கு அதிலுள்ள இலக்கணங்களைப் பற்றி கவலையில்லாமல் சரளமாகப் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள் உதாரணம் தமிழைப் போல. குழந்தையைப் போல ஒரு மொழியை கற்றுக் கொண்டீர்கள் என்றால் அது உங்களுக்கு தாய்மொழியாக விரைவில் அப்படித்தான்.
எல்லா மொழியிலும் உயிரெழுத்து மெய்யெழுத்து இருப்பதுபோல் ஆங்கிலத்திலும் இருக்கின்றன. ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள் உள்ளன.
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z இதில்
உயிர் எழுத்துக்கள் (vowels)
a, e, i, o, u.
மெய்யெழுத்துக்கள் (consonants)
b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z. ஆகியன அடங்கும்.
நாம் அனைவரும் எப்பொழுதும் ஒருவரைப் பற்றியோ அல்லது ஒன்றைப் பற்றியோ பேசிக்கொண்டே இருப்போம். பேசுவதற்க்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா. அது உபயோகமாக இருந்தாலும் சரி இல்லை வீண்வெட்டியாக இருந்தாலும் சரி, நாம் பேசிக்கொண்டே இருப்போம்.
- அவள் அழகாக இருக்கிறாள்.
- அவள் ஒல்லியாக இருக்கிறாள்
- அவள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பாள்
- அவன் நன்றாக படிப்பான்
- அவனுக்கு பரிசு கிடைத்தது
- அவன் உயரமாக இருக்கிறான்
- அவன் வேகமா நடப்பான்
- அந்த சினிமா ரொம்ப மொக்கையா இருக்கு
- அது நன்றாக வேலை செய்கிறது
- அந்த கட்டிடம் இடிந்துவிழுகிற நிலையில் இருக்கிறது.
இப்படி ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒன்றைப் பற்றி நாம் பேசிக் கொண்டே இருப்போம்.
எந்த மொழியாக இருந்தாலும் நீங்கள் பேசுகின்ற வாக்கியங்களை நன்கு ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால்,
- ஒருவரைப் பற்றி அல்லது ஒன்றைப் பற்றி நாம் வரையறை செய்வோம் (Describe somebody/something)
- ஒருவர் அல்லது ஏதேனும் ஒன்று செய்யக்கூடிய செயல்களை பற்றி சொல்வோம். (Somebody/something doing actions)
- ஒருவர் அல்லது ஏதேனும் ஒன்று பெறக்கூடிய விஷயங்களைப் பற்றி பேசுவோம். (Receive something from somebody/something)
இதில் ஏதேனும் ஒரு வகையில் காலத்திற்கு (tense) தகுந்தாற்போல் subjects தகுந்தார்போல் வாக்கியங்கள் மாறுபடும். ஒவ்வொரு வாக்கியத்தையும் நீங்கள் படிக்கும் பொழுது அதை கொஞ்சம் அலசி ஆராய்ந்து படிக்க ஆரம்பித்தால் உங்களுக்கு ஆங்கிலத்தை மிக எளிமையாக கையாள முடியும். இந்த மூன்று நிலைகளைத் தான் நாம் பின்வரும் பாடங்களில் விரிவாக படிக்க இருக்கிறோம்.